December 11, 2014

பெண்களுக்கான சிறப்புக் கட்டுரைப்போட்டி- இரண்டாவது பரிசு கட்டுரை

பெண் விரும்பும் ஆணின் பரிணாமம் – காதலன், கணவன், மகன் - சித்திரப்பாவை
ஒரு பெண் விரும்பும் ஆண் எப்படி இருக்க வேண்டும்? "நான் விரும்பும் அவனைப்போல" காதல் என்னையும் விட்டுவிடவில்லை, தொட்டுத் தழுவி,அனைத்து, இழுத்துக்கொண்டு போய் விட்டது திருமணத்திற்கு!
ஒரு பெண்விரும்பும் ஆணின் முதல் பரிணாமம் ஒரு சிறந்த காதலனிடம் தான் இருக்கிறது!
"உடம்பொடு உயிரிடை என்னமற் றன்ன மடந்தையொடு எம்மிடை நட்பு " (திருக்குறள் )
- உலக பொதுமறையின் சிறந்த உதாரணம் காதல்! உடலில்லாத உயிர், உயிரில்லா உடல் எப்படி சாத்தியமில்லையோ, அப்படித்தான் நீயில்லா நானும், நானில்லா நீயும் என்ற நிலையில் பிறக்கும் காதலையும், காதலனையும் பெண்கள் அதிகம் விரும்புகிறார்கள்! "காதல்" வளர்ந்தவர்களை குழந்தையாக்கி வேடிக்கை பார்க்கும் ஒரு அற்புத நிகழ்வு. இதில் பெரும்பாலும் பெண்கள் குழந்தைகளாக மாறி தன்னுடைய குறும்புத்தனத்தை இரசிக்கச் சொல்லி தொல்லை தரும் அழகிய ராட்சசிகளாய் மாறிவிடுகிறார்கள்! காதலிக்கும் பெரும்பாலான ஆண்களுக்கும் ரசிப்புத் தன்மை அதிகம் தேவைப்படுவது நிதர்சன உண்மையாகவும் இருக்கிறது! ஏதோ ஒரு கொஞ்சலில் காதலியை அழவைத்துத் தானும் அழும் ஆண்களை அதிகம் காதலிப்பது பெண்களுக்கு பிடித்த ஒன்று! சின்ன சின்ன ஊடலும், பின் வரும் கூடலும் காதலனின் தனி சிறப்பு!அழகான பூங்கா, அடர்ந்த மழை, மழை விட்ட சாரல், சற்று நேரத்தில் பூத்த மலர், அதோடு அவள் , அவளோடு நான் அவ்வளவு தான்! எல்லா பெண்களுக்கும் பிடித்த காதலனின் காதல் அங்கிருந்து தான் தொடங்க ஆரம்ப்பிக்கிறது!
இடைவிடாத பேச்சும் , இடையிடையே கொஞ்சம் கொஞ்சலும், அவளுக்கு பிடித்தது போல மாறும் குணமும் யாருக்கு உண்டோ அவர்களையே அதிகம் விரும்ப ஆரம்பிக்கிறார்கள்! ஒற்றை ரோஜாவில் மட்டும் காதல் தூது விடும் ஏராளமான காதலர்களுக்கு என் காதலும் ஒரு சிறந்த உதாரணமாக அமையட்டும்!
நான் விரும்பின நீ ஒரு மிகச் சிறந்த காதலான் தான் ...!!!

கணவன் :  
********************* காதலைச் சொல்லுவது எளிது, காதலோடு வாழ்வது கடிது! சிவன் பாதி சக்தி பாதி என்று கணவன் மனைவி வாழ்க்கையில் கூட கடவுளர்களுக்கு இடையில் சண்டை வந்து விடுகிறது! நீயா நானா போட்டியின் முடிவில் நாம் என்று வந்தால் தான் நந்தவன தோட்டத்தில் வாழ்க்கை அசைந்தாடும்! நீ,நான் என்று வேர் பிரித்தால் காதல் விரிசல் விட்டு ரத்தம் கசிய ஆரம்பித்துவிடும்!
மனைவி கணவனின் சரீரம் (புனித வேதகாமம் ) எவன் ஒருவன் தன் மனைவியை வெறுக்கிறானோ அவன் தன் சரிரத்தை வெறுப்பாத சொல்ல படுகிறது! ஒரு சிறந்த கணவன் தன் மனைவியை தாயாக நேசிக்க ஆரம்ப்பித்துவிடுவான்! ஒரு ஒட்டு மொத்த குடும்பத்தையும் ஒரே உறவில் அடையாளம் காட்டிக்கொள்ள முடியுமென்றால் அது கணவனிடம் மட்டுமே சாத்தியம்! காதலில் அன்பை மட்டுமே எதிர்பார்க்கும் நாம் திருமணத்தில் உரிமையையும் சேர்ந்து எதிர்பார்க்கிறோம்!
எதை செய்தாலும் மனைவியிடம் சொல்லி செய்ய வேண்டும் என்பதில் எல்லா பெண்களுக்கு ஒரு ஆசை இருக்கத்தான் செய்கிறது! சின்ன சண்டையும், அதன் பின் வரும் ஊடலும் வாழ்க்கையை அன்பில் கட்டி, பத்திர படுத்தி வைத்து கொள்கிறது!
என்ன தான் கணவன் மனைவியாய் வாழ்ந்தாலும், உனக்கு நானும் எனக்கு நீயும் நமக்கு துணையாய் காதலும் வாழ்ந்து வருகிறது!
அன்பு சண்டையின் காதல் பஞ்சாயத்தில் விட்டுக் கொடுபோம் அன்பாய்! நற் தம்பதியராய் நாம் இருப்போம்!

மகன் : 
*********
குழல் இனிது யாழ்இனிது என்பதம் மக்கள்
மழலைச்சொல் கேளா தவர்

தாஜ் மஹாலை காட்டிலும் சிறந்த காதல் பரிசு ஒன்று உண்டு!
அது நீயும் நானும் சேர்ந்து பெற்றெடுக்கும் பிள்ளை!
மகன் என்றால் தாய்க்கும், மகள் என்றால் தந்தைக்கும் மகிழ்ச்சி!

என்னதான் தாய் தந்தை ஆனாலும் எப்போதும் நம் பெற்றொருக்கு குழந்தைகள் தான்!
எல்லா பெற்றொருக்கும் தன் மகன் மருத்துவனாக ,பொறியாளனாக வேண்டும் என்ற எண்ணத்தில் சற்றே கொஞ்சம் சிறு வித்தியாசம், எனக்கு மகன் பிறந்தால் ஒரு வீரனாக வேண்டும் அதுவும் அபிமான்யூ வைப் போல ஒரு சிறந்த வீரன் என்றால் மட்டற்ற பெருமை!

எல்லா பிள்ளையும் நல்ல பிள்ளைதான் அன்னை வளர்ப்பதில்!
எல்லா அம்மாக்களும் பிள்ளையை ஒரு நல்ல மனிதாபி மானம் கொண்டவனாக வளர்ந்து விடட்டும்!


காதலன், கணவன், மகன் என்ற ஒவ்வொரு உறவுக்கும்,ஒவ்வொரு உன்னத நிலை உண்டு!
அது காதலில் தொடங்கி கல்யாணம் வரை வாழ்க்கையில் அழகாக கைப்பிடித்து நடத்தி செல்கிறது!

சில சண்டைகளில் விட்டு கொடுத்து போகலாம் தவறில்லை!
ஆனால் ஒருவரை விட்டு ஒருவர் விட்டு மட்டும் போகக் கூடாது.

ஆக்கத்திலும் சரி
அழிப்பதிலும் சரி
ஆண்களுக்கு முக்கிய பங்கு உண்டு!
எல்லா பெண்களுக்கும் ஒவ்வொரு கால கட்டத்திலும் ஆண்களை பிடிக்கத் தான் செய்கிறது!
அது காதலனாகட்டும், கணவனாகட்டும், ஏன் பிள்ளைகள் கூட ஆகட்டும் !பெண்கள் விரும்புவதற்காகவே ஆண்கள் தங்களின் குணநலன்களை அழகாக மாற்றிக் கொல்கிறார்கள்!

No comments:

Post a Comment

தங்களின் எண்ணங்களைப் பகிர்ந்து செல்லவேண்டுகிறோம்.._/\_