February 02, 2014

பொங்கல்விழா விளையாட்டுப்போட்டி 2014 - பரிசு வழங்குதல்


அன்புத்தோழமைகளுக்கு பணிவான வணக்கம்.

தமிழ்க்குடில் அறக்கட்டளை தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்யும் நோக்கத்தோடு அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராம அரசு நடுநிலைப்பள்ளியில் பயிலும் 80 மாணவர்களுக்கு இந்த மாதம் 25.01.14, 26.01.14 மற்றும் 27.01.14 (சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில்) ஆகிய மூன்று நாட்களும் போட்டிகளை நடத்தியது தாங்கள் அறிந்ததே.

இந்த மாதம் 02.02.14 (ஞாயிற்றுக்கிழமை) அன்று விளையாட்டுப்போட்டியில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலையில் தேர்ச்சியடைந்த மாணவர்களுக்கு பரிசும், சான்றிதழும் வழங்கியதோடு போட்டியில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் கலந்து கொண்டமைக்கான சான்றிதழும், ஊக்கப்பரிசும் வழங்கி அவர்களை உற்சாகப்படுத்தியது என்பதை தங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோம். அவற்றில் சில புகைப்படங்கள் தங்கள் பார்வைக்குப் பகிர்ந்துள்ளோம். மேலும் அதிக புகைப்படங்கள் விரைவில் பகிர்கிறோம். பரிசுகளை 
தமிழ்க்குடிலின் நிறுவனர் (Founder) திருமதி. வைரம் இராமமூர்த்தி அவர்கள் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கினார்.





தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து கரம்கோர்த்து உடன் பயணிக்கும் அன்புத்தோழமைகள் அனைவருக்கும் தமிழ்க்குடில் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது. 

February 01, 2014

பொங்கல்விழா விளையாட்டுப்போட்டி.

அன்புத்தோழமைகளுக்கு பணிவான வணக்கம்.
தமிழ்க்குடில் அறக்கட்டளை தமது செயல்பாடுகளின் மற்றுமொரு முயற்சியாக, பொங்கல் விழாவினையொட்டி, தமிழரின் பாரம்பரிய விளையாட்டுகளை நமது இளஞ்சிறார்களிடையே சென்றடையச்செய்து அவர்களை ஊக்குவிக்கும் எண்ணத்தில் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் தொடர் விளையாட்டுப்போட்டிகளாக நடத்துவதென தமிழ்க்குடில் முடிவு செய்ததோடு, அதன் முதல் கட்டமாக அரியலூர் மாவட்டம் சிலம்பூர் கிராம அரசு நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு இந்த மாதம் 25.01.14, 26.01.14 மற்றும் 27.01.14 (சனி, ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில்) ஆகிய மூன்று நாட்களும் கீழ்க்கண்ட போட்டிகளை நடத்தியது. விளையாட்டுப்போட்டியின் ஒரு சில படங்கள் தங்கள் பார்வைக்குப் பகிர்ந்திருக்கிறோம். குழந்தைகளுக்கு  பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்பட்ட பகிர்வுகள் அடுத்தப்பதிவில் பகிரப்படும் என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக்கொள்கிறோம். 

நடத்தப்பட்ட விளையாட்டு போட்டிகள்: 
1. உடற்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள்




ஓட்டப்பந்தயம் 

நீளம் தாண்டுதல்
கபடி

2. மனப்பயிற்சி சார்ந்த விளையாட்டுகள் 




கோலாட்டம்

கும்மி
இசை நாற்காலி

3. அறிவுசார்ந்த விளையாட்டுகள் 



சதுரங்கம்
ஆடுபுலி ஆட்டம்
கண்ணாமூச்சி 

4. ஞாபக சக்தி சார்ந்த விளையாட்டுகள். 


நடித்துக்காட்டுதல்
ஒப்புவித்தல்
பொருட்களை அடையாளம் காணுதல்.


தமிழ்க்குடிலின் செயல்பாடுகளில் தொடர்ந்து கரம்கோர்த்து உடன் பயணிக்கும் அன்புத்தோழமைகள் அனைவருக்கும் தமிழ்க்குடில் தமது மனமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறது.